| ADDED : நவ 27, 2025 07:03 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மானாவாரியாக செங்காந்தள் மலர்கள் பூத்துக்குலுங்கும் நிலையில் அவற்றின் சாகுபடியை ஊக்குவிக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். செங்காந்தள் மலர் மருத்துவ குணம் நிறைந்தது. கண்வலிப்பூக்கள், கார்த்திகை பூக்கள் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவற்றை திருப்பூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் பணப்பயிராக சாகுபடி செய் கின்றனர். இச்செடி வளர தேவையான தட்பவெப்ப நிலை சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் நிலவுவதால், இப்பகுதியிலும் அவற்றை தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்ய விவசாயிகளை வேளாண்துறையினர் ஊக்குவித்து தேவையான மானியம், உதவிகளை வழங்க வேண்டும்.