மேலும் செய்திகள்
வாலிபர் தற்கொலை
18-Dec-2024
திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன்திடலைச் சேர்ந்த செண்பகராஜாவின் மகன் சந்துரு 15, டூவீலரில் திருப்புவனம் வந்தார்.அரசு மருத்துவமனை எதிரே கொத்தங்குளத்தில் இருந்து மதுரை சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் பலியானார். பஸ் டிரைவர் நிலக்கோட்டை மணிகண்டனிடம் 49, திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது : ஏற்கனவே போலீசார் பற்றாக்குறை காரணமாக பணிச்சுமையில் உள்ளோம். பெற்றோர்கள் சிறுவர்களுக்கு டூவீலர் ஓட்ட கொடுக்க கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் பெற்றோர், உறவினர்கள் டூவீலர்களை வழங்குகின்றனர்.சிறுவர்கள் ஆர்வ மிகுதியால் அதிவேகத்தில் செல்கின்றனர். பலமுறை வழக்கு பதிவு செய்தும் பெற்றோர்கள் அலட்சியம் காரணமாக சிறுவர்கள் உயிரிழக்க வேண்டியுள்ளது என்றனர்.
18-Dec-2024