உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அகலமாகிறது பிரான்மலை சாலை

அகலமாகிறது பிரான்மலை சாலை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே விபத்து சாலையாக இருந்த பிரான்மலை சாலை தினமலர் செய்தி எதிரொலியாக அகலப்படுத்தப்பட்டு வருகிறது.மதுரை மாவட்டம் பள்ளபட்டியில் இருந்து மேலப்பட்டி, பிரான்மலை, செல்லியம்பட்டி வழியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி செல்லும் சாலை குறுகிய சாலையாக இருந்தது. சில இடங்களில் சாலை அகலப்படுத்தப்பட்ட நிலையில் முட்டாக்கட்டியில் இருந்து பிரான்மலை வரை குறுகியதாகவே இருந்தது.அச்சாலையில் அடிக்கடி விபத்தும், உயிர்ப்பலியும் ஏற்பட்டது. இச்சாலையை அகலப்படுத்த அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தினமலரிலும் செய்தி வெளியான நிலையில் இச்சாலையை மேலப்பட்டியில் இருந்து பிரான்மலை மதகுபட்டி வரை 3.5 கி.மீ., துாரம் ரூ. 3.80 கோடி மதிப்பில் அகலப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளது.ஏற்கனவே 3.75 மீட்டர் அகலமுள்ள இச்சாலை தற்போது 5.5 மீட்டர் அளவிற்கு அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக சாலையின் ஒரு புறத்தில் பள்ளம் தோண்டப்படுகிறது கற்கள் நிரப்பப்படுகிறது. தேவைப்படும் இடங்களில் ஆக்கிரமிப்பும் அகற்றப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி