உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காலை உணவு திட்டம் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

காலை உணவு திட்டம் பாதுகாப்பு அதிகாரி ஆய்வு

சிவகங்கை, - சிவகங்கை மஜித்ரோட்டில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் உணவு தயாரிக்கும் கூடம் உள்ளது.இங்கு தயாரிக்கப்படும் உணவு நகரில் உள்ள 3 பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு காலை உணவாக வழங்கப்படுகிறது. உணவு முழு சத்துக்களுடன் செயற்கை கலவை கலக்காமல் தயாரிக்கப்படுகிறதா என்று நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரவணகுமார் ஆய்வு செய்தார். இங்கு தயாரிக்கப்பட்ட உணவுகளில் நியூட்ரிசன் சத்து இருக்கிறதா என்று அறிவதற்காக உணவு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். தினந்தோறும் சமைக்கும் உணவுகளை உணவு மாதிரிக்கு எடுத்து வைக்க வேண்டும் என்று சமையலருக்கு அறிவுறுத்தப்பட்டது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி