உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாற்று பாதையின்றி பாலம் கட்டும் பணி

 மாற்று பாதையின்றி பாலம் கட்டும் பணி

தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியம் சிறுவாச்சி மெயின் ரோடு முதல் மணிக்கரம்பை செல்லும் ரோட்டில் மாற்றுப்பாதை அமைக்காமல் பாலம் கட்டும் பணி நடக்கிறது. சிறுவாச்சி மெயின்ரோட்டில் சாத்தனங்குடி விலக்கில் இருந்து மணிக்கரம்பை வரை செல்லும் ரோட்டில் பாலம் கட்டும் பணி நடக்கிறது. பாலம் கட்டும் பணி துவங்கும் முன் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். ஆனால், அதை அமைக்காமல் பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது இந்த ரோட்டில் மழை நீர் தேங்கி ரோடே சகதியாக காட்சி அளிக்கிறது. சகதியில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறுகின்றனர். கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் பாலம் கட்டுவதற்கு முன் மாற்றுப்பாதை அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை