உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடு திருட வந்ததாக நினைத்து அண்ணன், தம்பி அடித்துக் கொலை 4 பேர் கைது: 6 பேரிடம் விசாரணை

ஆடு திருட வந்ததாக நினைத்து அண்ணன், தம்பி அடித்துக் கொலை 4 பேர் கைது: 6 பேரிடம் விசாரணை

சிவகங்கை:ஆடு திருட வந்ததாக நினைத்து சிவகங்கை அருகே அண்ணன் தம்பியை அடித்துக் கொலை செய்தது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார் 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் கட்டாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் 31. இவரது தம்பி சிவசங்கரன் என்ற விக்னேஸ்வரன் 24. மணிகண்டன் கோயம்புத்துாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். சிவசங்கரன் கல்லம்பட்டியில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு அழகமாநகரியில் உள்ள திருமலையை சேர்ந்த சுப்பு என்பவரது தோப்பிற்கு அண்ணன் தம்பி இருவரும் சென்றுள்ளனர். அங்குள்ள ஆடு மற்றும் கோழிகளைத் திருட வந்ததாக கருதி அங்கிருந்தவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர். இருவரும் பலத்த காயமடைந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். எஸ்.பி., ஆஷிஷ் ராவத் தோப்பிற்கு சென்று விசாரித்தார். மதகுபட்டி போலீசார் அழகமாநகரியை சேர்ந்த திருப்பதி 45, பிரபு 30, விக்னேஸ்வரன் 31, தினேஷ் 32 ஆகியோரை கைது செய்தனர். மேலும் 6 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும் தங்களின் ஜல்லிக்கட்டு காளையை தேடி வந்ததாகவும் அந்த நேரத்தில் தோப்புக்குள் ஆடு மற்றும் கோழிகளை திருட வந்ததாக கருதி இருவரையும் தாக்கியதும் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ