உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம்

நாச்சியாபுரம்: கல்லல் அருகே எழுமாப்பட்டியில் பொங்கல் விழாவை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 41 ஜோடி வண்டிகள் பங்கேற்றன.கல்லல் ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சி எழுமாப்பட்டியில் பொங்கலை முன்னிட்டு மானகிரி ரோட்டில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.பெரியமாடு பிரிவில் 17 வண்டிகள் பங்கேற்றன. அதில் முதலிடம் அவனியாபுரம் மோகன்சாமி குமார், 2ம் இடம் அமராவதிபுதூர் வேலுகிருஷ்ணன், 3ம் இடம் தேனி பாலார்பட்டி சின்னமயி ஆகியோரின் வண்டிகள் பெற்றன. சின்னமாடு பிரிவில் 24 வண்டிகள் பங்கேற்றன. அதில் முதலிடம் வெட்டிக்காடு அபிேஷக், 2ம் இடம் நாட்டரசன்கோட்டை பழனி, 3ம் இடம் அவனியாபுரம் மோகன்சாமிகுமார் பெற்றனர். வெற்றி பெற்ற வண்டி உரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !