மேலும் செய்திகள்
பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம்
25-Dec-2024
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தேவர் குருபூஜையை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. பந்தயத்தை முன்னாள் தடயவியல் துறை இயக்குனர் விஜயகுமார் துவக்கி வைத்தார். ஐந்துநிலை நாட்டு மறவர் பேரவை தலைவர் பொன்.குணசேகரன், கவுரவத் தலைவர் இளம்பரிதி கண்ணன் முன்னிலை வகித்தனர். 39 மாட்டு வண்டிகள் பங்கேற்ற பந்தயம் 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாமன்னர் பூலித்தேவர் நினைவு அறக்கட்டளை மற்றும் பாசறையினர் செய்திருந்தனர்.
25-Dec-2024