உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விராமதியில் மாட்டு வண்டி பந்தயம்

விராமதியில் மாட்டு வண்டி பந்தயம்

கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் விராமதியில் நடந்த மாட்டு வண்டிப் பந்தயத்தில் 31 வண்டிகள் பங்கேற்றன. போட்டிகளை விராமதி மாணிக்கம் துவக்கி வைத்தார். பெரியமாடு பிரிவில் விராமதி தையல் நாயகி -கருப்பையா, திருப்பாலை விஷால், காரைக்குடி கருப்பண்ணன், அய்யம்பாளையம் கருப்பண்ணன் ஆகியோர் முதல் நான்கு இடங்களை வென்றனர். நடுமாடு பிரிவில் சுண்ணாம்பிருப்பு கண்ணன், நெய்வாசல் பெரியசாமி, கூலையானுார் ராஜீவ்காந்தி, வலையன்வயல் அறிவு-விராமதி செல்வமணி ஆகியோர் முதல் நான்கு இடங்களை வென்றனர். சின்னமாடு பிரிவில் பள்ளத்துார் ஹரிகிருஷ்ணன்,தஞ்சை கடம்பங்குடி காமாட்சியம்மன்,திருப்பாலை விஷால், சின்ன ஓவிலாபுரம் பரமசிவம் ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ