மதுரை -- தொண்டி இடையே இன்று பஸ் வழித்தட மாற்றம்
சிவகங்கை: காளையார்கோவிலில் இன்று நடக்கும் மருதுபாண்டியர் குருபூஜைக்காக மதுரை - தொண்டி இடையே செல்லும் பஸ்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து தொண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் மதுரை முக்கு, மேலுார் ரோடு, கோர்ட்வாசல், ராமசந்திரா பூங்கா (தற்காலிக பஸ் ஸ்டாண்ட்) வரலாம். அங்கிருந்து பெருமாள்பட்டி, ஒக்கூர், காளையார்மங்கலம், நாட்டரசன்கோட்டை, கவுரிபட்டி, கண்டுபட்டி, நடராஜபுரம், வெற்றியூர், ஒட்டாணம், ஆண்டிச்சியூரணி வழியாக தொண்டி நோக்கி செல்ல வேண்டும். தொண்டியில் இருந்து மதுரை நோக்கி வரும் பஸ்கள் இதே வழித்தடத்தில் செல்ல வேண்டும் என சிவகங்கை எஸ்.பி., அலுவலக செய்திகுறிப்பில் தெரிவித்தனர்.