உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பஸ் ஸ்டாப் இடம் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் முற்றுகை

பஸ் ஸ்டாப் இடம் ஆக்கிரமிப்பு கிராம மக்கள் முற்றுகை

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பஸ் ஸ்டாப் இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி கழுகேர்கடையில் சிமென்ட் கலவை நிறுவனத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் கழுகேர்கடை விலக்கில் தனியார் சிமென்ட் கலவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலையில் இருந்து கழுகேர்கடை கிராமம் ஒரு கி.மீ., துாரத்தில் இருப்பதால் விலக்கில் பஸ் ஸ்டாப் கட்ட தீர்மானிக்கப்பட்டது. தனியார் நிறுவனம் அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி நேற்று காலை கிராம மக்கள் நிறுவன வாசலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருப்புவனம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ.,சிவப்பிரகாஷ் ஆகியோர் வந்து இடம் குறித்து தாலுகா அலுவலகத்தில் முறையிட்டு தீர்வு காணக் கூறி சமாதானம் செய்தனர்.கழுகேர்கடை ஹக்கீம் கூறுகையில் : சிமென்ட் கலவை நிறுவன கனரக வாகனங்கள் கிராமச்சாலை வழியாக வெளியேறுவதால் சாலை சேதமடைந்து வருகிறது. பகல் முழுவதும் நிறுவனம் இயங்குவதால் சிமென்ட் துாசி பரவி சுகாதாரக்கேடு நிலவுகிறது. வரத்து கால்வாயில் கழிவுகளை கொட்டி அடைத்துள்ளனர். பொதுமக்கள் நின்று பஸ் ஏறி இறங்க வசதியாக பஸ் ஸ்டாப் அமைய உள்ள இடத்தை ஆக்கிரமித்துள்ளனர். பலதடவை முறையிட்டும் நிறுவனம் கண்டு கொள்ளவில்லை எனவே முற்றுகை போராட்டம் நடத்தினோம், என்றார்.சிமென்ட் கலவை நிறுவனத்தினர் கூறும்போது: அரசு இடம் எதனையும் ஆக்கிரமிக்கவில்லை. நான்கு வழிச்சாலை பணிக்காக எங்கள் இடத்தை தான் விட்டு கொடுத்துள்ளோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை