உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிரேக் டவுனாகி நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

பிரேக் டவுனாகி நின்ற பஸ் போக்குவரத்து பாதிப்பு

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று மாலை பழுதாகி குறுகிய வளைவில் நின்ற டவுன் பஸ்சால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி கிராமங்களில் இருந்து மூன்று முதல் ஐந்து முறை வரை இந்த பஸ்கள் சென்று வருகின்றன. பெரும்பாலான டவுன் பஸ்கள் பராமரிப்பின்றி அடிக்கடி பழுதாகி நின்று விடுவதால் பொதுமக்கள், பயணிகள் இறங்கி தள்ள வேண்டியுள்ளது.நேற்று மாலை 5:30 மணிக்கு நயினார்பேட்டையில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற டவுன் பஸ் திருப்புவனத்தில் குறுகிய வளைவில் திரும்பும் போது பழுதாகி நின்று விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் பஸ் ஸ்டார்ட் ஆகவில்லை. பயணிகள் பொதுமக்கள் சக டிரைவர்கள், கண்டக்டர்கள் என பலரும் இறங்கி தள்ளி பஸ்சை ஸ்டார்ட் செய்தனர்.20 நிமிடங்களுக்கும் மேலாக பஸ் பழுதாகி நின்றதால் நரிக்குடி ரோட்டில் செல்ல வேண்டிய வாகனங்களும், மானாமதுரை செல்ல வேண்டிய வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்து கிடந்தன. சமீபத்தில் திருப்புவனம் பணிமனைக்கு வாங்கப்பட்ட இரண்டு டவுன் பஸ்களும் மேலூர் நகருக்கே இயக்கப்பட்டன. எனவே திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு புதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை