சிட்கோ தொழிற்பேட்டையில் தொழில் துவக்க விண்ணப்பம்
சிவகங்கை: சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் துவக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:மாவட்டத்தில் சிவகங்கை சிட்கோ தொழிற்பேட்டையில் 8 தொழில் மனைகள், காரைக்குடியில் 165, கிருங்காக்கோட்டையில் 52 தொழில் மனைகள் காலியாக உள்ளன. புதிதாக தொழில் துவங்க விரும்புவோர் www.tansidco.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இத்தொழில்மனைகளை பார்வையிட விரும்புவோர் சிட்கோ மேலாளர், சிவகங்கையை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம், என்றார்.