உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதம்

காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் சேதம்

திருப்புவனம்: திருப்புவனத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் முறையான திட்டமிடல் இன்றி பதிக்கப்பட்டதால் பல இடங்களில் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் திருப்புவனம் நகரில் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. குழாய் வழியாக தண்ணீர் செல்லும் போது அதிக அழுத்தம் ஏற்படும், இதனை தவிர்க்க கேட் வால்வு அமைக்கப்படும். இந்த தொட்டி மூலமாக அழுத்தம் வெளியேறி குடி நீர் விநியோகம் சீராகும். ஆனால் காவிரி கூட்டு குடி நீர் திட்டத்தின் கீழ் ஒரு சில இடங்களில் மட்டுமே கேட் வால்வு அமைக்கப்பட்டதால் அழுத்தம் தாங்காமல் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. புதுார் வி.ஏ.ஓ., அலுவலகம், உச்சி மாகாளியம்மன் கோயில், வேன் ஸ்டாண்ட், வாரச்சந்தை நுழைவு வாயில் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை ரீதியாக தண்ணீர் திறந்த போதே குழாய்கள் சேதமடைந்து விட்டன. பழுது பார்த்த பின்னும் அதே இடத்தில் குழாய்கள் தொடர்ந்து சேதமடைந்து வருகின்றன. திருப்புவனத்தில் இருந்து மணலுார், சிலைமான் வரை குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. கேட் வால்வு முறையாக அமைக்கப்படாததால் பல இடங்களில் குழாய்கள் சேதமடைவது தொடர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !