உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்

சாக்கோட்டை சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் தேரோட்டம்

காரைக்குடி: சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடந்தது.ஆனித் திருவிழா ஜூலை 4ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும், சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடந்தது.நேற்று காலை வீரசேகர பிரியாவிடை உமையாம்பிகை தாயார், விநாயகர் தேருக்கு எழுந்தருளினர். தொடர்ந்து மாலையில் தேரோட்டம் தொடங்கியது. விநாயகர் தேர் முதலில் வர தொடர்ந்து வீரசேகர பிரியாவிடை தேரும், உமையாம்பிகை தேரும் நான்கு ரத வீதிகளில் சென்றது. இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை