செட்டிநாடு பள்ளியில் செஸ் போட்டி
காரைக்குடி: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 12 வயது முதல் 19 வயது வரையிலான மாணவர்களுக்கு போட்டி நடந்தது. நிகழ்ச்சியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி துணை முதல்வர் பிரேமா சித்ரா வரவேற்றார். பள்ளி முதல்வர் உஷா குமாரி போட்டியை தொடங்கி வைத்தார். மதுரை சஹோதயா ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், மாவட்ட சதுரங்க கழகச் செயலாளர் கண்ணன் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.