உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தைக்கு பூச்சி மருந்து மருத்துவமனையில் பலி

குழந்தைக்கு பூச்சி மருந்து மருத்துவமனையில் பலி

சிவகங்கை : சிவகங்கை அருகேயுள்ள பாப்பாக்குடியைச் சேர்ந்த கண்ணன் மகன் பம்பையன் 28. இவருக்கும் சாலுாரைச் சேர்ந்த சுமதிக்கும் 24, ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 வயதில் மகன், 10 மாதத்தில் மகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாக பிரச்னை இருந்தது. கோபமடைந்த சுமதி 10 மாத பெண் குழந்தையுடன் கொலுஞ்சிப்பட்டியில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு கொலுஞ்சிப்பட்டிக்கு சென்ற பம்பையன் மனைவியிடம் இருந்து குழந்தையை பெற்றுக் கொண்டு பாப்பாகுடியில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு வந்தார். அங்கு குழந்தைக்கு பூச்சி மருந்தை கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் இருவரையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்த 10 மாத பெண் குழந்தை நேற்று இறந்தது. இன்ஸ்பெக்டர் இளையராஜா விசாரித்து வருகின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி