உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தை கழுத்தறுப்பு பெண், தொழிலாளி கைது

குழந்தை கழுத்தறுப்பு பெண், தொழிலாளி கைது

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பிறந்த குழந்தையை கழுத்தறுத்து வீசிய சம்பவத்தில், குழந்தையின் தாய், தொழிலாளி கைது செய்யப்பட்டனர்.முத்தையா காலனியை சேர்ந்தவர் மகேந்திரன் 45, கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவியும் மகன், மகள் உள்ளனர். இவர் அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக்கினார். சிறுமி 18 வயதை கடந்த நிலையில் அக். 22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. வீட்டிற்கு அருகே உள்ள ஒரு சந்தில் அப்பெண் யாருக்கும் தெரியாமல் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு, பிளேடால் தொப்புள் கொடியை வெட்டி அகற்றியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையின் கை, கழுத்தை கத்தியால் அறுத்து மகேந்திரன் வீட்டின் முன் போட்டுள்ளார். குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையை வீசிச் சென்றது தாய் தான் என்றும், அதற்கு காரணமானவர் மகேந்திரன் என்பதும் தெரிய வந்தது. போலீசார் இளம்பெண்ணையும், மகேந்திரனையும் கைது செய்தனர். இளம்பெண் மீது கொலை முயற்சி வழக்கும், மகேந்திரன் மீது போக்சோ வழக்கும் பதியப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை