உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடியில் மழை மிளகாய் செடிகள் அழுகின

இளையான்குடியில் மழை மிளகாய் செடிகள் அழுகின

இளையான்குடி: இளையான்குடியில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையினால் குண்டு மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது.இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட இளையான்குடி, சூராணம், முனைவென்றி, சாலைக்கிராமம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குண்டு மிளகாய் விவசாயம் நடக்கிறது. இப்பகுதியில் விளையும் குண்டு மிளகாயில் காரம் மற்றும் மனம் அதிகம் இருப்பதால் பல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் குண்டு மிளகாய் பயிரிட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழைகாரணமாக நன்றாகவளர்ந்து செடிகளில் பூக்கள் மற்றும் காய்கள் பிடித்த நிலையில உதிர்ந்து செடிகள் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.முனைவென்றி, கொங்கம்பட்டி மிளகாய் விவசாயிகள் கூறியதாவது: 250 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் மிளகாய் சாகுபடி செய்துஉள்ளோம். தொடர் மழை காரணமாக மழைநீர் சூழ்ந்து கொண்டதால் பூக்கள் மற்றும் காய்கள் உதிர்ந்து செடி அழுகும்நிலையில் உள்ளது. கடன் வாங்கி விவசாயம் செய்து வந்த நிலையில் மழையால் இந்த வருடம்நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ