உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் சித்திரை விழா நிறைவு

மானாமதுரையில் சித்திரை விழா நிறைவு

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழா உற்ஸவ சாந்தியுடன் நிறைவு பெற்றது.இக் கோயிலில் சித்திரை திருவிழா 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது வீர அழகர் பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நேற்று முன்தினம் உற்ஸவர் வீர அழகர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவியருக்கு சந்தன காப்பு உற்ஸவமும், நேற்று உற்ஸவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ