உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வாரச்சந்தையில் தேங்காய் விலை ரூ.40 ஆக உயர்வு

மானாமதுரை வாரச்சந்தையில் தேங்காய் விலை ரூ.40 ஆக உயர்வு

மானாமதுரை: மானாமதுரை வாரச்சந்தையில் சின்ன பாகற்காய் ஒரு கிலோ ரூ.280க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60க்கும், உருளை ஒரு கிலோ ரூ.70க்கும், ஒரு தேங்காய் ரூ.40க்கும் விற்பனையானது.மானாமதுரை வாரச்சந்தைக்கு மதுரை, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து வியாபாரிகள் வந்து பல்வேறு வகையான பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.நேற்றைய சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ. 35, சின்ன வெங்காயம் ரூ. 60, பெரிய வெங்காயம் ரூ.50,சின்ன பாகற்காய் ரூ. 300, கத்தரிக்காய் ரூ.100, கேரட், முள்ளங்கி,சவ்சவ் ரூ.80, பச்சை மிளகாய் ரூ. 80, பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ரூ.160, உருளைக்கிழங்கு ரூ.70 தேங்காய் ஒன்று பெரியது ரூ.40, சிறியது ரூ.30 என விற்பனையானது.தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது: தேங்காய் விளைச்சல் அதிகமுள்ள பொள்ளாச்சி பகுதிகளில் மழை பெய்து வருவதைத் தொடர்ந்து வரத்து குறைந்ததாலும், கார்த்திகை பிறப்பதை ஒட்டி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்க இருப்பதாலும் தேங்காய் விலை கூடுதலாகி உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !