மேலும் செய்திகள்
முகூர்த்த நாளை முன்னிட்டு விமான கட்டணம் விர்...
08-Jun-2025
வரத்து குறைந்ததால் எலுமிச்சை விலை உயர்வு
19-May-2025
தமிழகத்தில் தஞ்சாவூர், தேனி, மதுரை, கோவை, திருப்பூர், விருதுநகர், வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 90 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்துள்ளனர். தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இங்கு விளைவிக்கப்படும் தேங்காய்கள் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களுக்கு விற்பனைக்காக அனுப்பபடுகின்றன.தற்போது நிலவிவரும் கடும் வெப்பம், நீர் பற்றாக்குறை காரணமாக தேங்காய் விளைச்சல் குறைந்து விட்டன. அதேநேரம் வைகாசி திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக அதிகளவில் தேங்காய் வாங்கப்படும். இதனால் இவற்றின் தேவையும் அதிகரித்துள்ளன.வரத்துகுறைவு, அதேநேரம் தேவைகள் அதிகரித்துள்ளதால், தேங்காய் விலைகளும் கிடுகிடுவென இரு மடங்காக உயர்ந்துவிட்டது. கடந்த மாதம் ரூ.15 க்கு விற்ற தேங்காய் ஒன்று, ரூ.30 க்கும், ரூ.20 க்கு விற்ற தேங்காய் ரூ.40, ரூ.25க்கு விற்ற தேங்காய் ரூ.50, ரூ.30 க்கு விற்ற தேங்காய் ரூ.60 என இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.* இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது, பொள்ளாச்சி, தஞ்சாவூர், கோயம்புத்துாரில் தேங்காய் விளைச்சல் வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் மதுரை மொத்த மார்க்கெட்டிற்கு தேங்காய் வரத்தும் குறைந்துவிட்டன. தற்போது கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களுக்காக தேங்காய் தேவை அதிகரித்துள்ளன. அதே நேரம் வரத்து இன்றி, தேவை அதிகரித்து விட்டதால், விலையும் கிடுகிடுவென இரு மடங்காக உயர்ந்து விட்டன, என்றனர்.
08-Jun-2025
19-May-2025