தீபாவளிக்கு லைசென்ஸ் பெற்று இறைச்சி கடை நடத்தலாம் கலெக்டர் தகவல்
சிவகங்கை, : தீபாவளியை முன்னிட்டு இறைச்சி விற்பவர்கள் லைசென்ஸ், பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:தீபாவளி பண்டிகைக்கு இறைச்சி விற்பனை செய்பவர்கள், உரிய இடங்களில் மட்டுமே ஆடுகளை வதை செய்ய வேண்டும். நோயுற்ற ஆடுகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இறைச்சி விற்பனை கடைகள் சுகாதாரமான முறையில் இருத்தல் வேண்டும். இறைச்சி கடைகளில் பணிபுரிவோர் உரிய மருத்துவ சான்று பெற்றிருக்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்கவும். இறைச்சிகளை ஈ, பூச்சிகள், கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான இடத்தில் வைத்து விற்க வேண்டும். பதிவு பெற்ற இறைச்சி கடைகளில் மட்டுமே பொதுமக்கள் வாங்க வேண்டும். இறைச்சியை பாத்திரத்தில் மட்டுமே விற்க வேண்டும். பாலிதீன் பயன்படுத்தினால், அபராதம் விதிக்கப்படும். தரமற்ற, சுகாதாரமற்ற இறைச்சி விற்பது தெரிந்தால், 94440 42322ல் புகார் அளிக்கலாம், என்றார்.