உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராவல் குவாரிக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முற்றுகை தேவகோட்டையில் குவாரிக்கு தடை விதித்த கலெக்டர்

கிராவல் குவாரிக்கு எதிராக கலெக்டர் அலுவலகம் முற்றுகை தேவகோட்டையில் குவாரிக்கு தடை விதித்த கலெக்டர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் உறுதிகோட்டை கிராவல் குவாரியால் நீர்நிலை பாதிப்பதாக அப்பகுதி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், குவாரிக்கு தடை விதித்து கலெக்டர் கே.பொற்கொடி உத்தரவிட்டார்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உறுதிகோட்டை ஊராட்சியின் கீழ் திட்டுக்கோட்டை, குமாரவேலுார், சீனமங்கலம், நெடோடை, தாஸ்புரம், உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் கண்மாய் பாசனம் மூலம் 250 ஏக்கரில் விவசாயிகள் ஒரு போக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். அதே போன்று சீனமங்கலம், குமாரவேலுாரில் உள்ள குடிநீர் ஊரணியில் இருந்து தண்ணீர் எடுத்து தான், இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் உறுதிகோட்டையில் 5 ஏக்கரில் கிராவல் மண் எடுக்கும் குவாரி நடத்த கனிம வளத்துறை அனுமதித்துள்ளது. 25 நாட்களாக இங்கிருந்து இரவு, பகலாக டிப்பர் லாரிகளில் கிராவல் மண் எடுத்து செல்லப்படுகிறது. இதற்கு அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனையும் மீறி தொடர்ந்து கிராவல் குவாரி நடந்து வந்ததால், நேற்று கிராமத்தினர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குவாரியை மூடவேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.இவர்களிடம், கனிம வளத்துறை இணை இயக்குனர் விஜயராகவன் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர் கலெக்டர் கே.பொற்கொடியை சந்தித்து கிராவல் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளித்தனர். அவர்களிடம் விசாரித்த கலெக்டர் இக்குவாரி தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வெளிவரும் வரை கிராவல் குவாரிக்கு தடை விதித்துவிட்டோம் என உறுதி அளித்தார்.

பாசன கண்மாய், குடிநீர் ஊரணி பாதிப்பு:

உறுதிகோட்டை டி.சண்முகவேல் கூறியதாவது, முந்தைய கலெக்டர் ஆஷாஅஜித்திடம் மனு அளித்தோம். தொடர்ந்து 3 முறை மனு அளித்தும் கிராவல் குவாரிக்கு தடை விதிக்கவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.இதற்கு பின்னரும் கிராவல் மண் எடுத்து செல்வதால் கண்மாய், ஊரணிகளுக்கு செல்லும் கால்வாய்கள் சேதமாகியுள்ளன. இதனால் கலெக்டரிடம் புகார் அளிக்க வந்தோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை