உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்வியியல் கல்லுாரி பவள விழா

கல்வியியல் கல்லுாரி பவள விழா

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை கல்வியியல் கல்லுாரி 75 ஆம் ஆண்டு பவள விழா கொண்டாடப்பட்டது. அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி தலைமை வகித்து பேசினார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். தமிழ்நாடு மத்திய பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன், அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசினர். அழகப்பா பல்கலை ஆட்சி குழு உறுப்பினர் ராஜாராம், பேராசிரியர் கலையரசன் வாழ்த்தினர்.உதவி பேராசிரியர் போர்ஷியர் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் முருகன், செயலாளர். ரமேஷ், இணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேவூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி பேராசிரியர் ஜெயசித்ரா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை