உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துப்பாக்கி சுடும் போட்டி மாணவிக்கு பாராட்டு

துப்பாக்கி சுடும் போட்டி மாணவிக்கு பாராட்டு

சிவகங்கை : கஜகஸ்தானில் நடந்த 16 வது சாம்பியன் ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியஅணி சார்பில் பங்கேற்ற அந்த்ரா ராஜ்சேகர் தங்கம், வெண்கலம் பெற்றார். சிவகங்கையில் பாராட்டு விழா நடந்தது. சிவகங்கை கே.ஆர்., மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். ஐ.ஏ.எஸ்., (ஓய்வு) கற்பூரசுந்தரபாண்டியன், சாந்தா, டாக்டர் சரண்யா ராஜ்சேகர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை எம்.எல்.ஏ., (அ.தி.மு.க.,) செந்தில்நாதன், முன்னாள் (இந்திய கம்யூ.,) எம்.எல்.ஏ., குணசேகரன், மன்னர் கல்வி குழுமம் மகேஷ்துரை வாழ்த்துரை வழங்கினர். பொறியாளர் பாண்டிவேல், மூத்த வழக்கறிஞர் மோகனசுந்தரம், ரமணவிகாஷ் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன், நல்லாசிரியர் கண்ணப்பன், வங்கி அலுவலர் (ஓய்வு) அனந்தராமன், திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், டாக்டர் மலர்கண்ணி, காங்., மாநில நிர்வாகி ஸ்ரீவித்யா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ