சமுதாயக்கூடம் திறப்பு
சிவகங்கை : காளையார்கோவில் அருகே தென்மாவளி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ரூ.21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்தறை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் வானதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.