உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரசாயன முறையில் பழத்தை பழுக்க வைப்பதாக புகார்

ரசாயன முறையில் பழத்தை பழுக்க வைப்பதாக புகார்

திருப்புவனம்: திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வாழை, ஒட்டு வாழை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. இயற்கையாக பழுத்த பழங்கள் விரைவில் அழுகி விடும். செயற்கை முறையில் பழங்களை வியாபாரிகள் சிலர் பழுக்க வைத்து விற்பனை செய்வதால் பழங்கள் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை கெடாமல் உள்ளது. ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் வயிறு உபாதையால் பாதிப்பு கடுமையாக ஏற்படும். தி.வடகரை மதிவாணன் கூறுகையில்: திருப்புவனத்தில் ரோட்டோரம் வாழைப்பழ கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களே அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றன. மாவட்ட குறைதீர் கூட்டத்திலும் மனு கொடுத்துள்ளேன். அதிகாரிகள் சோதனை நடத்தி செயற்கை முறையில் பழுக்க வைப்பதை நிறுத்த வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை