மகர்நோன்பு திடல் புனிதம் கெடுவதாக புகார்
காரைக்குடி : காரைக்குடி மகர் நோன்பு திடலில் மாநகராட்சியினர் கழிவு, குப்பையை கொட்டி புனிதத்தை கெடுப்பதாக கூறி பா.ஜ., சார்பில் கணபதி ஹோமம் நடந்தது. காரைக்குடி மகர் நோன்பு திடலில் ஆண்டுதோறும்,சுவாமி அம்பு போடும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இப்பகுதியில் மாநகராட்சியினர் குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை கொட்டுவதாக கூறி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். கொட்டப்பட்ட குப்பை கழிவு அகற்றப்பட்டது. இங்கு கழிவுகளை கொட்டி புனிதத்தை கெடுத்ததாக கூறி நேற்று பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.