உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் பத்திரப்பதிவு அலுவலக கட்டுமான பணி

கிடப்பில் பத்திரப்பதிவு அலுவலக கட்டுமான பணி

திருப்புவனம்: திருப்புவனம் பத்திரப்பதிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்ட நிலையில் இதுவரை புதிய கட்டடம் கட்டப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.திருப்புவனத்தில் 1882ல் போலீஸ் ஸ்டேஷன் அருகே பத்திரப்பதிவு அலுவலகம் கட்டப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராமங்களில் விற்பனை மற்றும் வாங்கப்படும் நிலங்களும் இங்கு பதிவு செய்யப்படுகிறது.நுாற்றாண்டை கடந்த கட்டடத்தில் அலுவலகம் இயங்கி வந்த நிலையில் மழை காலங்களில் மழை நீர் உள்ளே புகுந்து ஆவணங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து புதிய கட்டடம் கட்ட தீர்மானிக்கப்பட்டு கடந்த மார்ச்சில் அலுவலகம் தற்காலிகமாக திருப்புவனம் புதுார் தனியார் கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.மே மாதம் பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. மூன்று கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமையும் என அறிவிக்கப்பட்டது. அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு மூன்று மாதங்களாகியும் இன்று வரை புதிய கட்டடம் கட்டுமான பணி தொடங்கப்படவே இல்லை.திருப்புவனம் புதுாரில் அலுவலகம் செயல்படுவதால் பத்திரம் பதிவு செய்ய நீண்ட தூரம் சென்று வர வேண்டியுள்ளது. தனியார் கட்டடத்தில் போதிய வசதிகளும் செய்ய முடிவதில்லை. கட்டட பணியை விரைந்து துவக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை