தேவகோட்டையில் மழைநீர் கால்வாய்களை துார்வார வேண்டும்: கவுன்சிலில் தீர்மானம்
தேவகோட்டை: தேவகோட்டை நக ராட்சிக்கு உட்பட்ட பகுதி யில் கால்வாய்கள் ஆக்கிர மிப்பால், அடைபட்டு விட்டது. இதை அகற்றி, மழைகாலத்தில் கால்வாய் வழியாக மழை நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். தேவகோட்டையில் நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் சுந்தரலிங்கம் (அ.தி.மு.க) தலைமை வகித்தார். கமிஷனர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த விவாதம்: ரமேஷ், துணை தலைவர்: பஸ் ஸ்டாண்ட் இடிப்பு பணியில் சுற்றுப்புற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வில்லை. சுகாதார பிரிவில் வாங்கிய கருவிகள் தர மானதாக இல்லை. வடிவேல் முருகன் (அ.தி.மு.க.,): மழை காலம் வந்து விட்டது. புதிய இயந்திரம் வாங்கி உள்ளோம். இப்போதே துார் வார வேண்டும். பல கால்வாய்கள் அடைபட்டு போய்விட்டது. பாலமுருகன் (தி.மு.க.): பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் கட்ட தற்காலிக இடங்களை தேர்வு செய்வதில் பல எதிர்ப்புகளை கடந்து திறம்பட வளர்ச்சி பணிகளை செய்கிறோம். வேலுச்சாமி (காங்.): புதிய வீட்டு வசதி குடியிருப்பில் பூங்காவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பூங்கா அமைக்க கோரிக்கை வைத்து வருகிறேன். சில வீதிகளில் ரோடு போடவில்லை. பிச்சையம்மாள் (தி.மு.க.): வீட்டிலேயே பன்றிகளை வளர்த்து கழிவுகளை கால்வாயில் விடுகிறார்கள். அய்யப்பன் (அ.தி.மு.க.): எனது வார்டில் 15 எல்.இ.டி. பல்புகளை போட வேண்டும். பூங்கா வில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். சுதா (காங்.,) : 10 வது தொகுதி பள்ளி எதிரே உள்ள முட்புதரில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. முட்புதரை அகற்றி பூங்கா அமைக்க வேண்டும். கால்வாயும், ரோடும் சேர்ந்து தான் டெண்டர் விடப்பட்டது. ரோடு மட்டும் போட்டு விட்டு கால்வாய் கட்டவில்லை. கமலகண்ணன் (அ.ம.மு.க.,): இரவில் அடிக்கடி மின்தடை ஏற் படுகிறது. நகராட்சியிலேயே பணியாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நிரோஷா (அ.தி.மு.க.): வாரச்சந்தையில் மரம் விழுந்து ஒருவர் பலி யானார். இதே நிலையில் தான் 16வது தொகுதி பள்ளி யில் இலவம் பஞ்சு மரம் உட்பட பல மரங்கள் சாய்ந்து விட்டன. தலைவர்: பஸ் ஸ்டாண்ட், மார்க்கெட் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவகோட்டை நகரில் மெட்டல் ரோடு இல்லாத நிலைக்கு ரோடு வசதி செய்துள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.