மேலும் செய்திகள்
கிராமங்களுக்கு கூடுதல் பஸ் இயக்குங்க
10-Oct-2024
காரைக்குடி,: காரைக்குடியில் டவுன் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அபாயம் நிலவுகிறதுகாரைக்குடியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் வந்து செல்கின்றனர். சாக்கோட்டை, புதுவயல், மானகிரி, பள்ளத்துார், அமராவதிபுதுார் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் டவுன் பஸ்களில் வந்து செல்கின்றனர்.காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லுாரிகளுக்குச் செல்ல போதிய பேருந்து இல்லாததால் குறிப்பிட்ட பேருந்துகளை மட்டுமே மாணவர்கள் நம்பி உள்ளனர். இதனால், டவுன் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிவதோடு, படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் அவலமும் அரங்கேறி வருகிறது.காலை மற்றும் மாலை நேரங்களில் போதிய பஸ்களை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
10-Oct-2024