உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் ஆபத்தான படிக்கட்டு பயணம்

காரைக்குடியில் ஆபத்தான படிக்கட்டு பயணம்

காரைக்குடி; காரைக்குடியில் மாணவர்கள் ஆபத்தை உணராமல், பஸ்சின் படிகளில் பயணம் மேற்கொள்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலை மற்றும் பள்ளி கல்லுாரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தினமும் பஸ்சில் வந்து செல்கின்றனர். சாக்கோட்டை, புதுவயல், மானகிரி, பள்ளத்துார், அமராவதிபுதுார் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் டவுன் பஸ்களில் வந்து செல்கின்றனர். தவிர வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்சில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்கின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல போதிய பஸ்கள் இல்லை. குறிப்பிட்ட பேருந்துகளே உள்ளன. இதனால், டவுன் பஸ்களில் கூட்டம் நிரம்பி படிகளில் மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இது குறித்து பல முறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.பெரும் விபத்து ஏற்படும் முன் போலீசார், போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி