மேலும் செய்திகள்
விஸ்வநாதபுரம் தடுப்பணையில் வழிந்தோடும் தண்ணீர்
23-Sep-2025
இளையான்குடி: இளையான்குடி அருகே கச்சாத்தநல்லூர் வைகை ஆற்றுப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக மீன்கள் செத்து மிதந்தன. இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூரில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை ஒட்டியே வைகை ஆறு செல்கிறது. விவசாயம், குடிநீர் தேவையை இந்த ஆறு பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகை ஆற்றில் தண்ணீர் வந்த போது இப்பகுதியில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில் ஏராளமான மீன்கள் இருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இப்பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதன் காரணமாக வைகை ஆற்றுக்குள் தேங்கி நின்ற தண்ணீர் குறைந்து வருவதினால் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. கிராம மக்கள் கூறியதாவது, கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான வெயில் அடித்து வருவதினால் குடிநீருக்கு கூட சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆற்றில் கூட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. கடந்த ஆடிப்பட்டத்தின் போது ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை துவக்கினாலும் தொடர்ந்து மழை இல்லாத காரணத்தினால் பயிர்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகிறோம். ஆகவே தற்போது வைகை அணையில் போதுமான தண்ணீர் இருப்பதினால் வைகை ஆற்றில் உடனடியாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைக்கும் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றனர்.
23-Sep-2025