உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானங்காத்தான் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை 

மானங்காத்தான் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை துார்வார கோரிக்கை 

சிவகங்கை: மானாமதுரை அருகே மானங்காத்தான் கண்மாய்க்கு நாட்டார் கால்வாயில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய் துார்வாரப்படாததால், நீர்வரத்தில்லை என கிராம மக்கள் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் மனு அளித்தனர்.மானாமதுரை அருகே கிருங்காங்கோட்டை நாட்டார் கால்வாய் ரூ.40 கோடி மதிப்பில் துார்வாரும் பணி துவக்கப்பட்டது. இக்கால்வாய் துார்வாரும் பணியுடன், கண்மாய்களுக்கு செல்லும் வரத்து கால்வாய்களிலும் தடையின்றி நீர் செல்லும் விதத்தில் துார்வார வேண்டும். கிருங்காக்கோட்டையில் இருந்து ராஜகம்பீரம், அரிமண்டபம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் கள்ளிக்குடி புத்துார் வரை செல்லும் நாட்டார் கால்வாய் துார்வாரும் பணி நடைபெற்றது. இதன் மூலம் மானாமதுரை தாலுகாவில் 15 கிராம கண்மாய்கள் முழுமையாக பாசன வசதி பெறும். இதில், நாட்டார் கால்வாயில் இருந்து மானங்காத்தான் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாய் இணைத்துள்ள இடத்தில் இருந்து கண்மாய் வரை மேடான பகுதியாக உள்ளது. இதனால் மானாங்காத்தான் கண்மாய்க்குள் நீர் சேகரமாகாமல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மானாங்காத்தான் கண்மாய்க்கு நாட்டார் கால்வாய் தண்ணீர் முழுமையாக செல்லும் விதமாக 500 மீட்டர் துாரமுள்ள பொது மதகு வரை கால்வாயை துார்வாரி, எவ்வித தடையின்றி கண்மாய்க்கு நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மானாங்காத்தான் கிராம விவசாயிகள், பொதுமக்கள் சிவகங்கை கலெக்டரிடம் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை