உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிதைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

சிதைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய்

காரைக்குடி; காரைக்குடி செஞ்சை பகுதியில் கழிவு நீர் கால்வாய் முற்றிலும், சேதமடைந்து கிடப்பதால் தண்ணீர் செல்ல வழியில்லை.காரைக்குடி செஞ்சை நாகலிங்கம் தெருவில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி கடந்த ஆண்டு நடந்தது.கணேசபுரம் செல்லும் இச்சாலையானது, சவுடேஸ்வரி சவுடாம்பிகை கோயில் செல்லும் முக்கிய சாலையாகவும் உள்ளது.இச்சாலையின், பல இடங்களில் முறையாக சாலையோரம் தடுப்பு அமைக்கப்படவில்லை.தவிர கழிவு நீர் கால்வாய் சேதம் அடைந்து மூடி கிடக்கிறது. இரவு நேரங்களில் விபத்து அபாயமும் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை