தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீரை அகற்றிய ஊழியர்கள்
மானாமதுரை : மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வீடுகள், மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவு நீர் வாய்க்கால் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக மானாமதுரையில் தொடர்ந்து மழை பெய்ததை தொடர்ந்து கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பை அதிகமாக தேங்கி தண்ணீர்செல்ல வழியின்றி ரோட்டில் ஓடியது. நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதனைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் கழிவை அகற்றினர்.