உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  மாவட்ட அறிவியல் கண்காட்சி

 மாவட்ட அறிவியல் கண்காட்சி

திருப்புத்தூர்: திருப்புத்தூர் கிறிஸ்துராஜா மெட்ரிக்., பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் தபசம் கரீம் வரவேற்றார். காளையார்கோவில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர் சேவற்கொடியோன் துவக்கி வைத்தார். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி விளக்கம் அளித்தார். கண்காட்சியில் மாவட்ட அளவில் இருந்து 250 க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகளை இடம் பெற செய்தனர். இதில் சிறந்து விளங்கிய கண்காட்சி மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்தனர். இதற்காக தேர்வான கிறிஸ்துராஜா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அப்சல், பரணீதரன், ஆசிரியைகள் அபர்ணா, எழிலரசியை கவுரவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்