அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை
திருப்புத்துார்: திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை மற்றும் மகப்பேறு மருத்துவர் இல்லாத நிலை உள்ளது. திருப்புத்துார் அரசு மருத்துவமனையில் தற்போது விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் செயல்படுகிறது. ஆனால் விபத்துக்களில் ஏற்படும் எலும்பு முறிவிற்கு சிகிச்சை அளிக்க இங்கு எலும்பு சிகிச்சை டாக்டர் இல்லாத நிலை உள்ளது. மீண்டும் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை அனுப்ப வேண்டியுள்ளது. இதனால் எலும்பு சிகிச்சை மருத்துவர் விரைவாக நியமிக்க பொதுமக்கள் கோரியுள்ள னர். மேலும் இங்கு பிரசவம் பார்க்க வசதியாக மகப்பேறு மருத்துவரும் இல்லை. இதனால் மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முழுநேரம் மகப் பேறு மருத்துவர் இல்லாததால் முன்பு மாதம் 50 பிரசவங்கள் நடந்த நிலையில் தற்போது பாதியாக குறைந்து விட்டது. இதனால் மகப்பேறு மருத்துவரை நியமிக்கவும் பொதுமக்கள் கோரியுள்ளனர்.