உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் பழைய குழாய்களை மாற்ற குடிநீர் வாரியம் திட்டம்

திருப்புத்துாரில் பழைய குழாய்களை மாற்ற குடிநீர் வாரியம் திட்டம்

திருப்புத்துார்:திருப்புத்துாரில் காவிரிகுடிநீர் திட்ட தரைமட்ட தொட்டியிலிருந்து மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் பழைய குழாய்களை முழுமையாக மாற்றுவதாக குடிநீர் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். திருப்புத்துாரில் காவிரிகுடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இத்திட்டம் துவங்கி 15 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டதால் குழாய்கள் வலுவிழந்ததை அடுத்து முத்தரசநல்லூரில்இருந்து ராமநாதபுரம் வரை முக்கிய குழாய்கள் மாற்றும் பணி தற்போது நிறைவடைந்துள்ளது.ஆனால் இத்திட்டத்தில் திருப்புத்துாரில்தரைமட்ட தொட்டியிலிருந்து மேல்நிலைத்தொட்டிக்கு செல்லும் பழைய குழாய்கள் மாற்றப்படவில்லை.இந்த குழாய்கள் வலுவிழந்து பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு மக்கள்அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது. இக்குழாய்களை மாற்ற ரூ.2 கோடியில் குடிநீர் வாரியத்தினர் திட்டமிட்டுஉள்ளனர். நீண்ட காலமாக கோரியும், குடிநீர் வாரியத்தினர்நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து இ.கம்யூ. கட்சியினர் போராட்டம் அறிவித்துஇருந்தனர். இந்நிலையில் வருவாய்த்துறையினர் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தையில் குடிநீர் வாரியத்தினர் குழாய்கள் மாற்ற நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளனர். உதவிப் பொறியாளர் முகேஸ்வரன் கூறுகையில், 'தற்போது அளவீடு பணி துவங்க உள்ளோம். அதன் பின்னர் மதிப்பீடு செய்து நிதி அனுமதி வாங்கி விரைவாக நிறைவேற்றப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !