உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்

மானாமதுரையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர்

இளையான்குடி: மானாமதுரை கீழ்கரை பகுதியில் உள்ள வார்டுகளில் இன்று முதல் ஒருநாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 4500க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானாமதுரை கீழ்கரை பகுதி 7வது வார்டில் காந்தி சிலை அருகே உள்ள பழமை வாய்ந்த குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்ததை தொடர்ந்து தற்போது அத்தொட்டியை இடித்து அகற்றும் பணி துவங்கவுள்ள நிலையில் இங்கிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படும் 3,4,5,7,8,9,10,12,13 ஆகிய வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் விநியோகம் செய்யப்படும் என நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, கமிஷனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை