உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விபத்தில் டிரைவர் பலி

விபத்தில் டிரைவர் பலி

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார். மதுரை கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் 55, ஷேர் ஆட்டோ ஓட்டி வரும் இவர் நேற்று பிரமனுாரில் பயணிகளை இறக்கி விட்டு நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை சென்ற கார், ஆட்டோ மீது மோதியதில் கார் சாலையோர இரும்பு தடுப்புகளை தாண்டி விழுந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை