உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொசுத்தொல்லை டெங்கு அச்சத்தில் ஊழியர்கள்

சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கொசுத்தொல்லை டெங்கு அச்சத்தில் ஊழியர்கள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் திறந்து கிடக்கும் தண்ணீர் தொட்டியில் கொசுக்கள் உற்பத்தியாகி ஊழியர்கள் மற்றும் அவ்வழியாக செல்வோருக்கு டெங்கு பரவ வாய்ப்புள்ளது.இங்குள்ள ஒன்றிய அலுவலகத்திற்கு கடந்தாண்டு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.இந்த அலுவலகத்தின் பின்புறம் அரசு துவக்கப்பள்ளி, தோட்டக்கலைத் துறை அலுவலகம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை செயல்படுகிறது. அலுவலக கட்டடத்தின் பின்புறம் மூடப்படாமல் திறந்து கிடக்கும் தொட்டியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.இதில் கொசுக்கள் உருவாகி ஊழியர்களையும், அவ்வழியாக செல்வோரையும் கடிக்கிறது.இதுபோல், நல்ல தண்ணீர் தேங்கி கிடக்கும் இடங்களில் தான் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும். இதனால் மாணவர்கள், பிற துறை அலுவலர்கள் பலரும் அவ்வழியாக செல்லவே அஞ்சுகின்றனர்.எனவே கொசுக்களின் உற்பத்தி மையமாக திகழும் தண்ணீர் தொட்டியை மூடி வைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி