வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தவறு தான் .சாவி எடுத்து கொடுத்தவரை பாராட்ட வேண்டும்
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் எஸ்.பி.ஐ., (பாரத ஸ்டேட் வங்கி) ஏ.டி.எம்., மிஷினில் பணத்தை நிரப்பி விட்டு சாவியை எடுக்காமல் ஊழியர்கள் சென்றனர். வாடிக்கையாளர் ஒருவர் இதுகுறித்து போலீசாருக்கு தெரிவித்ததால் பணம் தப்பியது.காரைக்குடியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., செயல்படுகிறது. ஊழியர்கள் அந்த மிஷினில் பணம் நிரப்பி விட்டு சென்ற நிலையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் பணம் எடுக்க வந்தார். மிஷினில் பணம் வைப்பதற்கான லாக்கரில் சாவிக்கொத்து இருந்துள்ளது. அதிர்ச்சியுற்ற அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த எஸ்.ஐ., ராஜவேல் உடனடியாக சாவியை மீட்டதுடன் சம்மந்தப்பட்ட ஊழியர்களுக்கு தெரிவித்தார். விரைந்து வந்த வங்கி ஊழியர்கள் போலீசாரிடம் சாவியைப் பெற்று மிஷினில் இருந்த பணத்தை சரி பார்த்தனர்.வங்கி அதிகாரிகள் கூறுகையில்,'மிஷினில் பணம் வைத்தவர்கள் வெளியே பூட்டப்படும் அவுட்டர் கவர் சாவியை தவறுதலாக வைத்து விட்டனர். இதனால் எந்த பாதிப்பும் இல்லை.பணம் வைத்தவுடன் அதுவே ஆன்லைன் மூலம் லாக் ஆகிவிடும். பணம் வைத்தவர்கள் கூட மீண்டும் திறக்க முடியாது. மும்பையில் இருந்து அனுமதி கொடுத்தால் தான் மீண்டும் திறக்க முடியும்,' என்றனர்.
தவறு தான் .சாவி எடுத்து கொடுத்தவரை பாராட்ட வேண்டும்