மேலும் செய்திகள்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட ரூ.6 கோடி ஒதுக்கீடு
09-Jun-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரி ஒன்றிய அலுவலக வளாகத்தில் இறந்து கிடக்கும் நாய் உள்ளிட்டவற்றின் உடல்கள், குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. அலுவலகத்தை சுற்றி கட்டடங்களும், செடி, புதர்களும் உள்ளன.சில நாட்களாக இந்த அலுவலக வாசலில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. நாய், பன்றிகள் இப்பகுதியில் செத்துக் கிடப்பதாலும், குப்பைகளாலும் அலுவலகம் உள்ளே நுழைய முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஊழியர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டே அலுவலகத்திற்குள் செல்ல வேண்டி உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக அங்கு வரும் மக்களும் சிரமப்படுகின்றனர். ஒரு வாரமாக துர்நாற்றம் வீசியும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அவரவர் அறையில் அமர்ந்து பணிபுரிகிறார்கள்.
09-Jun-2025