உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ஆ.தெக்கூரில் இடப்பிரச்னையில் குடும்பமே தற்கொலை முயற்சி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை 

 ஆ.தெக்கூரில் இடப்பிரச்னையில் குடும்பமே தற்கொலை முயற்சி: கலெக்டர் அலுவலகம் முற்றுகை 

சிவகங்கை: ஆ.தெக்கூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடியிருந்தவர்களை அகற்ற வருவாய்துறையினர் முற்பட்டதால், குடும்பத்துடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தனர். திருப்புத்துார் அருகே ஆ.தெக்கூரை சேர்ந்த கார் டிரைவர் பச்சையப்பன் 50. இவரது மனைவி நதியா 42, இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 7 சென்ட் இடத்தில் 30 ஆண்டுக்கும் மேலாக வசித்து வந்தனர். இந்நிலையில் அரசின் வீடு திட்டத்தில் வீடு கட்டி வசிக்கின்றனர். அதற்கு முன்பாக புதிதாக வீடு கட்டியுள்ளனர். அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனக்கூறி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுபடி அரசு புறம்போக்கு நிலத்தை அகற்ற நேற்று வருவாய்துறையினர் முயற்சித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பச்சையப்பன், அவரது மனைவி உட்பட குடும்பத்தினர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அகற்றுவதை வருவாய்துறையினர் தற்சமயம் கைவிட்டனர். இந்நிலையில் நேற்று மதியம் 1:45 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்த அவர்கள், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., அமுதா அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, தீக்குளிப்பதை தடுத்தார். அனைவரும் கலெக்டர் பி.ஏ.,(பொது) விஜயக்குமாரிடம் மனு அளித்தனர். அவர் நேரடி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ