உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

தாக்குதலில் விவசாயி பலி த.வெ.க., நிர்வாகி சிக்கினார்

சிவகங்கை: விவசாயி இறந்த வழக்கில், சிவகங்கை மாவட்ட த.வெ.க., மாணவரணி அமைப்பாளர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், சிவல்பட்டியை சேர்ந்த விவசாயி சந்திரன், 54. சிவகங்கை காமராஜர் காலனியில் வசித்தார். நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு, சிவகங்கை கூட்டுறவுபட்டி அருகே காரில் வந்த போது, எதிரே தமராக்கியை சேர்ந்த த.வெ.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளரான பிரபுகுமார், 40, அருண்பிரகாஷ், 20, ஆகியோர் வந்த கார், மோதுவது போல வந்துள்ளது. இதில், இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. பின், அங்கிருந்து சந்திரன் அதிகாலை, 1:30 மணிக்கு வீட்டிற்கு சென்றார். மனைவி ரேணுகாவிடம், தமராக்கி பிரபுகுமார், அருண்பிரகாஷ் இருவரும் தன்னை தாக்கியதில் நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். சந்திரனை உடனடியாக, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை மருத்துவமனையில் ரேணுகா சேர்த்தார். அங்கு சிகிச்சையில் இருந்த சந்திரன், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு உயிரிழந்தார். ரேணுகா புகாரின்படி, தாலுகா போலீசார் பிரபுகுமார், அருண்பிரகாஷ் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ