உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகள் சங்க கூட்டம்

விவசாயிகள் சங்க கூட்டம்

சிவகங்கை: சிவகங்கையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முத்துராமு, மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் காவிரி- வைகை-குண்டாறு வைப்பாறு இணைப்பு பாசன திட்டத்திற்கு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து பணியை துவக்க வேண்டும். சுப்பன் கால்வாய் திட்டத்தை விரைவு படுத்தி கூடுதலாக இளையான்குடி திருவள்ளூர் நீர்ப்பாசன கண்மாய் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வங்கிகளில் விவசாய கடன் நகைகளில் மூலம் பெற்ற கடன்களுக்கு வட்டி மட்டும் கட்டி புதுப்பித்த பழைய நடைமுறையை தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ