உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பகலில் மின்மோட்டாரை விவசாயிகள் இயக்கலாம்

பகலில் மின்மோட்டாரை விவசாயிகள் இயக்கலாம்

சிவகங்கை: சிவகங்கை விவசாயிகள் பகலில் அதிக மின்சாரம் கிடைப்பதால், அந்நேரங்களில் விவசாய தேவைக்கான மின்மோட்டாரை இயக்க வேண்டும் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) வீரமணி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மின்வாரியத்திற்கு பகலில் அதிகளவில் சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் கிடைக்கிறது. இரவில் அந்தளவிற்கு மின்சாரம் வாரியத்திற்கு கிடைப்பதில்லை. எனவே பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்துவதன் மூலம் பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிக்க முடியும்.மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் பொழுது ஏற்படும் மாசுபாட்டின் அளவும், சூரிய மின் உற்பத்தி மூலம் குறைக்கவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடவும் அனைத்து விவசாயிகளும் தங்களது மின் மோட்டார்களை பகலிலேயே இயக்கி, விவசாய பயிர்களுக்கு நீர் பாய்ச்சி மின்வாரியத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !