உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாக்காளர் பட்டியலில் குளறுபடி: விவசாயிகள் புகார்

வாக்காளர் பட்டியலில் குளறுபடி: விவசாயிகள் புகார்

சிவகங்கை: திருப்புவனம் அருகே பழையனுார் பாசனக் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித்திடம் பழையனுார் கிராம மக்கள் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: திருப்புவனம் அருகே பழையனுார் கிராமத்தில் நீர்வளத் துறைக்குச் சொந்தமான கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத்துக்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் குளறுபடி உள்ளது. இந்த குளறுபடிகளை சரி செய்து பழையனுார் கண்மாய் நீரினைப் பயன்படுத்துவோர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ